#BREAKING திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுக அமைச்சர்களுக்கு ஆப்பு ரெடி... அதிரவிடும் ஸ்டாலின் அறிவிப்புகள்..!

Published : Mar 13, 2021, 12:55 PM IST
#BREAKING திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுக அமைச்சர்களுக்கு ஆப்பு ரெடி... அதிரவிடும் ஸ்டாலின் அறிவிப்புகள்..!

சுருக்கம்

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெ உள்ளது.  இந்நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்ததையத்து வேட்பாளர் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

திமுக தேர்தல் அறிக்கை;-

*  திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

*  அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். 

*  ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

*  ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி.

*  ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

*  இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி முறையாக பட்டம் பெற்று வேலை என்று காத்திருக்கும் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.

*  முதியோர் உதவி தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

*  பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கப்படும் பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம். உயர்த்தப்படும்

*  ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

*  மகளிர் பேறுகால உதவி 24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

*  சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாங்கப்படும். 

*  சொத்துவரி உயர்த்தப்படாது.

*  ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 70 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!