பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துனர் பலி.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்.!

By vinoth kumarFirst Published May 14, 2022, 1:21 PM IST
Highlights

சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் இருந்த முருகன் என்பவர் தாக்கியதால் இறந்த நடத்துநர் பெருமாள் குடும்பதத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அறிவித்துள்ளார்.

மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் முருகன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் பெருமாளுக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பில் முடிய போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  உயிரிழந்த நடத்துனர் பெருமாள்(54)  கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில்,  பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் இருந்த முருகன் என்பவர் தாக்கியதால் இறந்த நடத்துநர் பெருமாள் குடும்பதத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அறிவித்துள்ளார். பேருந்து நடத்துநர் பெருமாள்பிள்ளை இறந்த செய்தி கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

click me!