
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றொருக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தேமுதிக சார்பில் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தற்கு கண்டனம் தெரிவித்து இன்று போராட்டம் நடைபெறும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சூரப்பாவை நீக்கக்கோரியும் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார்.
இதில் பங்கேற்ற விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் தமிழகத்துக்கு காவிரி நீர் தான் வேண்டும், இந்த சூரப்பா தேவையில்லை என முழக்கமிட்டனர்
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது போல் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.