
கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய துணை பேராசிரியை நிர்மலாதேவி, சாத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிமன்றம் வந்த நிர்மலா தேவிக்கு மகளிர் அமைப்புகள், பெண் வழக்களிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய தேவாங்க கல்லூரியின் துணை பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக நிர்மலா தேவியை
சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டபோது பாதுகாப்பு
பணியில் ஏராளமான போலீசார் இருந்தனர்.
சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி கொண்டுவரப்பட்டபோது, மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். பெண்
வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்ததினர். இதனால் நீதிமன்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த நிலையில், நிர்மலா தேவி மீது புகார் அளித்த 4 மாணவிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு சின்னையா வரவழைக்கப்பட்டு, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.