
அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள், பொது அறிவில்லாத பொறுக்கிகள்தான் தமிழகத்தில் ஊடகத்துறையில் தற்போது பணி புரிகிறார்கள் என நடிகர் எஸ்,வி,சேகர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ள நிலையில் பத்திரிக்கையாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடத் தூண்டிய அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி போராசிரயை நிர்மலா தேவி குறித்த பத்திரிக்கையாள்களை சந்தித்த தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தை செல்லமாக தடவினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவர்னரின் செயலுக்கு பெரும்பாலோனோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நிலைமை ரொம்ப சீரியஸ் ஆனது தெரிந்ததும் கர்னர் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்.
இது குறித்து தனது முகநூலில் கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர், பத்திரிக்கையாளர்களை குறிப்பி பெண் பத்திரிக்கையாளர்களை மிகக் கேவலமாக விமர்சனம் செய்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களை பொறுக்கிகள் என்றும் கேவலமான அறிவிலிகள் என்றும் சாடியுள்ளார்.
பெரிய ஆட்களிடம் படுக்காமல் யாரும் ரிப்போர்ட்டர் ஆகவோ செய்தி வாசிப்பாளர் ஆகவோ ஆகிவிட முடியாது என மிகவும் மட்டமான முறையில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவுக்கு பத்திரிக்கை சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இதே போல திமுக எம்.பி.கன்மொழியும் எஸ்.வி. சேகரின் பதிவிக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.