ஆண்டவன் இருக்கான்.. மூன்றாவது அலை வந்தாலும் தமிழ்நாட்டுக்கு கவலை இல்ல.? ஐசிஎம்ஆர் வெளியிட்ட ரிப்போர்ட்.

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2021, 11:19 AM IST
Highlights

விரைவில் நாட்டை கொரோனா மூன்றாவது அலை  தாக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நாட்டில் எந்த அளவுக்கு உருவாகி இருக்கிறது என்பது தொடர்பான ஆய்வுகள் அடுத்தது நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் 69.2 சதவிகிதம் நபர்களுக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசின் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனோவுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை கண்டறிய மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

விரைவில் நாட்டை கொரோனா மூன்றாவது அலை  தாக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நாட்டில் எந்த அளவுக்கு உருவாகி இருக்கிறது என்பது தொடர்பான ஆய்வுகள் அடுத்தது நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கொரோனோவுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை கண்டறிய மத்திய சுகாதாரத்துறை செயலர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் தமிழகத்தில் 46 சுகாதார மாவட்டங்களில் நோய் பாதிப்பு இடங்களை கண்டறிந்து நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் செரோ சர்வே  அண்மையில் ஐ.சி.எம்.ஆர் சார்பில் 4வது கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தியாவில் 70 மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டது. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 79 சதவீதத்தினக்கும் , குறைந்தபட்சமாக கேரளாவில் 44.4 சதவீதத்தினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 69.2 சதவிதம் பேர் கொரோனோ எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக ஐ சி எம் ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில்.
 

click me!