சீண்டக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் ஜி.கே.வாசன்... வைகோ, திருமாவை மிஞ்ச செம்ம பிளான்...?

Published : Nov 29, 2018, 09:31 AM IST
சீண்டக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் ஜி.கே.வாசன்...  வைகோ, திருமாவை மிஞ்ச செம்ம பிளான்...?

சுருக்கம்

தனது கட்சி அரசியல் அரங்கில் இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்த நீண்ட இடைவேளைக்கு பிறகு பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஜி.கே.வாசன் ஏற்பாடு செய்துள்ளார்.

தனது கட்சி அரசியல் அரங்கில் இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்த நீண்ட இடைவேளைக்கு பிறகு பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஜி.கே.வாசன் ஏற்பாடு செய்துள்ளார்.

அஜித் தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த சமயம் அது. கார் ரேஸ் போன்றவற்றிலும் கவனம் செலுத்திக் கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வந்த அஜித்தால் இரண்டிலும் சோபிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தன்னை வைத்து காதல் மன்னன் வெற்றிப்படம் கொடுத்த சரணுடன் இணைந்து அட்டகாசம் எனும் படத்தில் அஜித் நடித்தார். அந்த படத்தில் ஒரு வசனம் வரும், எழுந்துட்டேன், இந்தா வர்றேன். என்பது தான் அந்த வசனம். 

இந்த வசனத்தை நினைவுபடுத்தும் வகையில் தான் ஜி.கே.வாசன் தற்போதைய நடவடிக்கை இருந்து வருகிறது. காங்கிரசில் இருந்து விலகி கடந்த 2014ம் ஆண்டு த.மா.கா கட்சியை மீண்டும் துவங்கினார் வாசன். துவக்கத்தில் விறுவிறுப்பாக கட்சிப்பணியாற்றிய வாசன் அதன் பிறகு சைலன்ட் ஆனார். 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க மிகவும் முயற்சி செய்தார். முடியவில்லை.

ஜெயலலிதாவும் கூட வாசனை நேரில் அழைத்து பேசினார். நான்கு தொகுதிகள் தருவதாகவும் ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் இதனை ஏற்காமல் மக்கள் நலக்கூட்டணியில் வாசன் இணைந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் போன்ற கட்சிப் பிரமுகர்கள் கட்சி மாறினர். மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வாசன் இருக்கும் இடம் தெரியாமல்போனது. 

வாசனையும், அவரது கட்சியையும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் தான் அரசியலில் இருப்பதை தெரிவிக்க திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு வாசன் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக ஏற்பாடு செய்து அரசியல் கட்சிகளின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்க வேண்டும் என்பது தான் வாசனின் திட்டம். இதற்காக கையில் இருந்து காசை கணிசமாக இறக்கியுள்ளதுடன், வாசனே நேரடியாக பலரையும் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கானஏற்பாடுகளை முடுக்கிவிட்டு வருகிறாராம்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!