நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா.? எடப்பாடியை சந்தித்தது ஏன்.? ஜி.கே.வாசன் புதிய விளக்கம்

By Ajmal Khan  |  First Published Feb 4, 2024, 9:38 AM IST

மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லையென ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 


பாஜக கூட்டணிக்காக பேசவேண்டிய நிலை இல்லை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,  மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு செயற்குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் , இதன் அடிப்படையில், மாவட்ட அடிப்படையில், மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து சிறிது நாட்களில் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும் என கூறினார். 

Tap to resize

Latest Videos

பாஜகவினர் கூட்டணி தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்வி பதில் அளித்தவர், பாஜக தேசிய கட்சி பொறுப்பாளர்கள் உள்ளனர். பல மாநிலங்களில் தங்களது வியூகத்தால் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லை எந்த மாநிலத்திலும் கூட்டணிக்காக பேச அவசியம் இல்லையென தெரிவித்தார். 


அதிமுகவுடன் கூட்டணியா.?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில்,2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து 12ஆம் தேதி செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  

 மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக நடத்துகின்ற போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதில அளித்தவர், தேர்தலுக்கான நாடகத்தை துவக்கியதாகவே அர்த்தம். பட்ஜெட் என்று எடுத்து பார்த்தால் தமிழகத்திற்கு என்று மரியாதை கொடுத்துள்ளார்கள். தமிழகத்திற்கு தேவையான நிதி கொடுக்க வேண்டும் என்கிற போது தமாகவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தேர்தலுக்காக வாதம், பேச்சு என்கிறபோது திமுகவின் நாடகம் மக்களிடம் அது எடுபடாது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலை குழந்தைதனமாக செயல்படுகிறார்.!தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் ஜெயிப்பதே அதிசயம் - எஸ்.வி. சேகர் விளாசல்

click me!