கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காதீங்க... காங்கிரஸ் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

By Ajmal Khan  |  First Published Feb 4, 2024, 7:29 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட கார்த்தி சிதம்பரம் முயற்சித்து வரும் நிலையில், மீண்டும் போட்டியிட சீட் கொடுக்க கூடாது என காங்கிரஸ் கட்சி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்காதீங்க

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இதனால் எப்படியாவது தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதியை பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்க கூடாது என அந்த கட்சியினரே தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

கார்த்தி சிதம்பரம் சர்ச்சை கருத்து

காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் இருப்பது அணைவரும் அறிந்ததே, அந்த வகையில் கார்த்தி சிதம்பரம் கடந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை அவ்வப்போது நக்கல் செய்து கருத்துகளை தெரிவிப்பார். குறிப்பாக வட மாநில தேர்தலிகளில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது இன்று நெட்பிளிக்ஸ் என்ன படம் பார்க்கலாம் என தனது சமூக வலை தளம் மூலம் கருத்து கேட்டார். அடுத்ததாக மீண்டும் வாக்கு சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை தெரிவித்த போது, வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என கருத்து கூறி காங்கிரஸ் தலைமையை அதிர வைத்தார்.  தற்போது மோடிக்கு இணையான தலைவர் ராகுல் காந்தி இல்லையென்ற தகவலை தெரிவித்து பரபரப்பை உண்டு செய்தார். இதனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமில்லை, தேசிய அளவில் உள்ள தலைவர்களும் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளனர். 

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக தீர்மானம்

இந்தநிலையில் சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தலைமை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை என்ற விதத்தில் கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸில் சீட் கொடுக்க கூடாது என 3 தீர்மானஙகளை நிறைவேற்றப்பட்டது.

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக தீர்மானம்

இந்தநிலையில் இதற்கு போட்டியாக சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் போட்டி கூட்டம் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தனியார் மஹாலில் தேர்தல் பொருப்பாளர் அருள் பெத்தையா தலைமையில் நடைபெற்றது. அப்போது  சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரமே போட்டியிட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் - சசிகலா திடீர் சந்திப்பு.. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட சின்னம்மா..!

click me!