அண்ணாமலை குழந்தைதனமாக செயல்படுகிறார்.!தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் ஜெயிப்பதே அதிசயம் - எஸ்.வி. சேகர் விளாசல்

Published : Feb 04, 2024, 08:47 AM IST
அண்ணாமலை குழந்தைதனமாக செயல்படுகிறார்.!தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் ஜெயிப்பதே அதிசயம் - எஸ்.வி. சேகர் விளாசல்

சுருக்கம்

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லையென எஸ்.வி.சேகர் விமர்சித்தார். 

நிஜ வாழ்க்கையில் கூட இருப்பவர்களே துரோகம்

பாஜக ஆதரவாளரும், அண்ணாமலை எதிர்ப்பாளருமான நடிகர் எஸ்.வி.சேகர் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ராமர் கோயில் கும்பாபிஷேகம் என்பது 500 ஆண்டுகளாக சட்டப்படி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கட்டப்பட்டது. அயோத்தியில் அங்கு உள்ள முஸ்லிம்களே இந்த கோவிலை பெருமையாக கருதப்படக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

விஜயகாந்த் மிகவும் நல்லவர் ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவ்வளவு நல்லவராக இருக்கக் கூடாது. நேற்று விஜய் கட்சி துவங்கியதாக அறிவித்தபோது கூட நான் கூறினேன் சினிமாவில் கத்தி பிளேடுகளுடன் வருபவர் தவறானவர் என்று அடையாளம் காணலாம். ஆனால் அரசியல் நிஜ வாழ்க்கையில் கூடவே இருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்வார்கள்.

அண்ணாமலை குழந்தைதனமாக செயல்படுகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி  மீண்டும் பிரதமர் ஆவார். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும். அண்ணாமலை ஒரு குழந்தைத்தனமாக செயல்பட்டு வருகிறார். அரை மணி நேரம் மட்டுமே நடக்கிறார். அண்ணாமலை நடைபயணம் செய்வதால் எந்த பயனும் இல்லை.  எப்போதும் கூட்டம் வந்து ஓட்டாக மாறாது. அண்ணாமலை தனது பெருமையை பேசி வருகிறார்.  அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு தான் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார்.

பாஜக ஒரு இடம் ஜெயிப்பதே அதிசயம்

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி, ஆனால் தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி, மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மட்டுமே நாம் பார்க்க முடியும்.அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை பிஜேபியில் உள்ள மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் யாரையும் மதித்ததில்லை என எஸ்.வி.சேகர் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

அமைச்சர்கள் மீதான வழக்கு! தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி வாங்கலை.. தானாகவே வழக்கு பதிவு செய்தார் - பதிவாளர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!