சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ! அதிர்ச்சியில் அமமுக !!

By Selvanayagam PFirst Published May 3, 2019, 9:19 AM IST
Highlights

இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் ஒன்றான சூலூரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அமமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சடட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி  ஆகிய நான்கு தொகுதிகளிலுட் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் அமமுக போட்டியிடுகிறது. அமமுகவைப் பொறுத்தவரை மிகுந்த போராட்டத்துக்கும் பிறகு சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடும் தங்களது கட்சியினருக்கு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு பரிசப்பெட்டி சின்னம் பெற்றது.

இந்நிலையில் சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தத் தொகுதியில்  வேட்பு மனு பரிசீலனை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சுயேட்டை வேட்பாளர்களுக்கு நேற்று சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நான்கு தொகுதிகளிலும் நடந்தது. இதில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவருக்கு பரிசுப்பெட்டி சினனத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

click me!