தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது பேய் மழை..!! மக்களே உஷார்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2020, 2:18 PM IST
Highlights

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயரலை 2.0 முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சையும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தேவாலா (நீலகிரி) 13 சென்டிமீட்டர் மழையும், பந்தலூர் (நீலகிரி) 9 சென்டி மீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூர்(காஞ்சிபுரம்) பொன்னை அணை, (வேலூர்) தாமரைபாக்கம் (திருவள்ளூர்) தலா7 சென்டி மீட்டர் மழையும், போளூர் (திருவண்ணாமலை) மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) கே சி எஸ் (அரியலூர்) கள்ளக்குறிச்சி, கொரட்டூர் (திருவள்ளூர்) தலா ஐந்து சென்டி மீட்டர் மழையும்,

 

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 48-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 12 வரை குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 12 வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயரலை 2.0 முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

click me!