கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிகலாம்: தமிழக அரசு தகவல்.

Published : Sep 08, 2020, 01:50 PM IST
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிகலாம்: தமிழக அரசு தகவல்.

சுருக்கம்

அந்த மனுவில், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாய கல்வி உரிமை இடங்களுக்கான கால அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது எனவும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிகலாம் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 6 முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு கட்டாய இலசவச கல்வி கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்துதலையோ வழங்கவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளதும், கல்வி கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என ஜூலை 17ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் கட்டயா கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் முகம்மது ரசின் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு தரப்பில் கட்டாய கல்வி உரிமை இடங்களுக்கான கால அட்டணவனை வெளியிடப்பட்டுள்ளதாகவும் , ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 விண்ணப்பிகலாம் என தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவிப்பு மக்களிடம் சென்றடையவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, அரசின் கால அட்டவணையை தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிட வேண்டும் எனவும், அந்த அறிவிப்பில் இந்த மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர். கட்டாய கல்வி உரிமைகள் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!