கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்… பாஜக குறித்து கிஷோர் கே சுவாமி பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Feb 3, 2023, 7:04 PM IST
Highlights

தயவு செய்து கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று பாஜக-வை அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி வலியுறுத்தியுள்ளார். 

தயவு செய்து கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று பாஜக-வை அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி வெளியிட்ட அறிக்கையில், 1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை 'தீய சக்தி' என்று அழைத்தார். அந்த நிலையிலிருந்து, தற்போது 2023-வரை திமுக இன்னும் மாறவில்லை. செல்வி ஜெயலலிதா அம்மாவும், தான் உயிருடன் இருக்கும் வரை, திமுகவை "தீய சக்தி" என்றுதான் அழைத்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்குப் பெறாத நிலையில், ஈரோடு கிழக்கில் இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும், திமுக என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்களிடையே தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப் போக்குகள் ஒருபுறம்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் வைத்த அந்த பாயிண்ட்... டோட்டலாக எடப்பாடிக்கு எதிராக மாறிய உச்சநீதிமன்றம் உத்தரவு..!

அது மட்டுமின்றி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்புணர்வும், தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பரவலாக நடைபெறும் கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத திமுகவுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம். அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன் ஒன்றுபடுவது மிக அவசியம். இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்துப் பேசினோம்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!

இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது, நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சார்பாக சில விஷயங்களை தெரிவித்தோம். இந்த இடைத்தேர்தலில் மக்கள் நலனை, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தயவு செய்து கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று பாஜவை அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் அறிக்கையை பகிர்ந்து, தனது டிவிட்டர் பக்கத்தில், இன்னொரு கட்சி தங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று வந்து சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது. இது பாஸ்வான் குடும்பம் அல்ல. உங்கள் இடத்தைக் காட்டுவோம். தயவு செய்து கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

You guys have the audacity to come and tell another party how they should resolve their issues . This is not Paswan family . We will show you your place . Please get out of the alliance . https://t.co/kZz6HG8fBF

— kishore k swamy 🇮🇳 (@sansbarrier)
click me!