அடி தூள்.. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி.. வெளியானது தீர்மானம்.. அலறும் ஓபிஎஸ்.

Published : Jul 05, 2022, 01:44 PM ISTUpdated : Jul 05, 2022, 01:52 PM IST
அடி தூள்.. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி.. வெளியானது தீர்மானம்.. அலறும் ஓபிஎஸ்.

சுருக்கம்

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தீர்மானங்களின் விவரம் தற்போது பல ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக இயங்கிவந்த நிலைமையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.  கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் அது தடைப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. இதில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதையும் படியுங்கள் :  என் தெய்வம் குடியிருந்த வீட்டில் கொலை..! குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.. திடீரென விழித்தெழுந்த ஓபிஎஸ் மகன்

ஆனால் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்திக் காட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அப் பொது கூட்டத்தில் சுமார் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தீர்மானம் குறித்த தகவல்களும் சில ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : OTP சொல்லாம ஏன் கார்ல ஏறுன.. மனைவி குழந்தைகள் கண்முன் மென்பெறியாளரை அடித்து கொன்ற ஓலா டிரைவர்...

 அத்தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு:-

1.கழக அமைப்பு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தால்

2.  தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

3.  கழக ஒருங்கிணைப்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுப்பது சம்பந்தமாக.

4.  கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க முடிவு எடுப்பது சம்பந்தமாக

5.  கழக இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெற உள்ள கழக பொதுக்குழு விலையே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.

6.  கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.

7.  கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் சம்பந்தமாக.

8.  புரட்சித்தலைவர் வாயில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் செயல்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் வரலாற்று வெற்றிகளும்.

9.அம்மா அரசின் மக்கள் நல திட்டங்களை ரத்து செய்யும் விடிய திமுக அரசுக்கு கண்டனம்.

10. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்

11.  சட்டம் ஒழுங்கைப் பேணி காக்க தவறிய திமுக அரசுக்கு எதிராக கண்டனம்.

12.  மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.

13.  இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.

14.  அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

15.  நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்

16.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கழகத்தினர் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசு கண்டனம் என மொத்தம்.

16 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 அதாவது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இந்த தீர்மான நகல்கள் அனுப்பப்பட்டுள்ளது இதில் இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு பொதுச் செயலாளரை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!