அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? ஓபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Jul 5, 2022, 11:38 AM IST

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவை தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பும் உயர்நீதிமன்ற உத்தரவு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தண்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!

undefined

அப்பொழுது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர் 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவை தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க;- அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன்..! முன்னாள் அமைச்சர் பேச்சால் திடீர் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு வைத்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

click me!