என் தெய்வம் குடியிருந்த வீட்டில் கொலை..! குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.. திடீரென விழித்தெழுந்த ஓபிஎஸ் மகன்

By Ajmal Khan  |  First Published Jul 5, 2022, 1:07 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபீரதீப் திடீர் வெண்டுகோள் விடுத்துள்ளார்.


கொடநாடு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இபிஎஸ்க்கு 69 மாவட்ட செயலாளர்களும் 2400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்துள்ளது. கொடநாடு கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்குகளில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வேண்டும் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தூத்துக்குடி மாவட்ட பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்பாட்டமும் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

பாஜக முக்கியத்துவம் கொடுப்பது ஓபிஎஸ்க்கா..? இபிஎஸ்க்கா..?மாநில செயலாளர் பேச்சால் பரபரப்பு

இபிஎஸ் மவுனம் ஏன்?

ஓபிஎஸ் ஆதரவாளராக கருதப்படும் மருது அழகுராஜ், கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், உண்மை ஒருநாள் வெல்லும் கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான  பங்களாவில் சம்பவம் நடந்த  ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் . அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன் . இரண்டு தினம்  முன்பு தனியார்  தொலைக்காட்சியில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியை கண்டுபிடிக்க ஆர்வம் இல்லை... கோடநாடு வழக்கு பற்றி முன்னாள் அதிமுக நிர்வாகி பரபரப்பு கருத்து!!

வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்

நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது  சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன் . ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம்  கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் .இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற  கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்ததாக அந்த பதிவில் ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடியை கைது செய்யுங்க.. திடீர் போராட்டம்.. இபிஎஸ் அதிர்ச்சி!

 

click me!