அதலபாதாளத்துக்குப் போன இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி ! 8 துறைகளில் கடும் சரிவு !!

Published : Sep 02, 2019, 11:02 PM ISTUpdated : Sep 02, 2019, 11:07 PM IST
அதலபாதாளத்துக்குப் போன இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி ! 8 துறைகளில் கடும் சரிவு !!

சுருக்கம்

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு தூணாக விளங்கும் மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வளர்ச்சியில் கடும் சரிவடைந்துள்ளது.

பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் நிலக்கரி, கச்சா  எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் ஜூலை மாத வளர்ச்சி 2.1% ஆக குறைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்) இது 7.3% ஆக இருந்தது. இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 3% ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.9% ஆக வளர்ச்சி விகிதம்  இருந்தது.வாங்கும் திறன் மற்றும் குறைந்துவிட்ட உற்பத்தி திறனின் காரணமாக 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜிடிபி 5% ஆக சமீபத்தில் குறைந்தது.

தற்போது வெளிவந்துள்ள தரவுகளின் படி இந்த 8 முக்கிய துறைகளில் 5 துறைகளின் வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய்,  இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள், ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இத்துறைகளின் வளர்ச்சி கடந்த 2018 ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 5.9 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், 2019  ஏப்ரல் - ஜூலை மாதங்களில், 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

இது இந்திய பொருளாதார வல்லுநர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவின் மாஸ்டர் ப்ளான்..! ஒவ்வொரு வீட்டிற்கும் இன்ப அதிர்ச்சி... லீக்கான முக்கிய சீக்ரெட்..!
அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு