இந்தியாவை அழிக்கிறதுக்கு எங்ககிட்ட அணுகுண்டு ரெடியா இருக்கு ! பாகிஸ்தான் அமைச்சரின் திமிர் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Sep 2, 2019, 10:13 PM IST
Highlights

இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் திமிராக பேசியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. 

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக  ஐ.நா.அவையில் புகார் அளித்தது. ஆனால் சீனா தவிர வேறு நாடுகள் பாகிஸ்தானை ஆதரவளிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் மிகவும் கடுப்பாகியுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்குமிடையே  போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையமொன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் எங்களிடம்  உள்ளன.
மோடியின் சிந்தனைகள் என்பது காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.

இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இதுபோலச் செய்யாது என்ற எண்ணத்துடன் அணுகுண்டு சோதனைகளை செய்தது முதல் தவறு.
அதேபோல் காஷ்மீர் மக்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இரண்டாவது தவறு என பேசினார். பாகிஸ்தான் அமைச்சரின் இந்த திமிர் பேச்சு இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..

click me!