அய்யோ இவங்களுக்கு பொருளாதாரமே தெரியாதே ! உண்மையைப் போட்டுடைத்த சுப்பிரமணியன் சுவாமி !!

By Selvanayagam PFirst Published Sep 2, 2019, 9:32 PM IST
Highlights

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பொருளாதாரம் தெரியாது என்று சுப்பிரமணியன் சுவாமி மிகக்கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது 80வது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியிலுள்ள கோயிலில் கொண்டாடினார். இதையடுத்து திருச்செந்தூர் சென்ற சென்ற அங்கும் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, எதிர்க்கட்சிகளிலுள்ள பல தலைவர்கள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் ஒவ்வொருவராக சிறைக்கு சென்றுவருகின்றனர். அவையெல்லாம் என்னுடைய வழக்குகள்தான். அதில் வெற்றிபெற கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள ஆட்சிக்கு வழிகாட்டுமாறும் வேண்டிக்கொண்டேன் என்றும்  தெரிவித்தார்.

பொருளாதார மந்தநிலை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனரே என்ற கேள்விக்கு பதிலிளித்த அவர், குற்றம்சாட்டுவது சுலபமானது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது செய்த தவறுகளின் பாதிப்புகள் தற்போதும் உள்ளன. எனவே தற்போதைய நிலைக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒரு வீரர். அவர் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார்.ஆனால், பொருளாதாரம் என்பது மிகப்பெரிய கட்டமைப்பு. பொருளாதார மேதை ஒருவர் நிதியமைச்சராக இருந்திருக்க வேண்டும். 

ஆனால் இதற்கு முன்பு இருந்த அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால்தான் தப்புத் தப்பாக  பேசிவருகிறார்கள். மக்களுக்கு ஊக்கமளித்தால்தான் அவர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள். வரிக்கு மேல் வரி போட்டு, ஜிஎஸ்டி போன்ற புரியாத வரிகளை கட்டச் சொன்னால் என்ன செய்வார்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.

பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமியின் இந்தப் பேச்சு பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!