அமெரிக்காவை வலம் வரும் முதல்வர்.. கோட் சூட்டில் அசத்தல்!!

By Asianet TamilFirst Published Sep 2, 2019, 5:49 PM IST
Highlights

தமிழக முதல்வர் பழனிசாமி , தனது அரசுமுறை பயணத்தின் இரண்டாம் கட்டமாக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடந்த 28 ம் தேதி புறப்பட்டு சென்றார்.அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இங்கிலாந்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது தனது இங்கிலாந்து பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்றிருக்கிறார் முதல்வர்.

அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை நியூயார்க் நகரில் சந்திக்கிறார். அங்கு அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாற்ற இருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

இதன் பிறகு பஃபல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளை பார்வையிட இருக்கும் முதல்வர் அங்கு  சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கிறார்.

அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு 8 மற்றும் 9 ம் தேதிகளில் துபாய் செல்லும் முதல்வர், தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார்.

தனது அரசுமுறை பயணங்களை முடித்துக்கொண்டு 10 ம் தேதி தாயகம் திரும்புகிறார்.

click me!