சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஏன் பட்ட பகலில் வங்கியில் கொள்ளை..? ஸ்டாலினை பார்த்து எகிறும் பிரேமலதா..

By Thanalakshmi V  |  First Published Aug 15, 2022, 1:02 PM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்


75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மேலும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:பெரியார் சிலை குறித்து அவதூறு.. தலைமறைவாக இருந்த கணல் கண்ணனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கஞ்சா விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. 

இதனை தமிழ்நாட்டு முதலமைச்சர் உடனடியாக தடுக்க,  தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் இது போன்ற அநாகரிகமான செயலில் ஈடுபட கூடாது இதனை தேமுதிக கண்டிக்கிறது என்றார்.

மேலும் படிக்க:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராஜினாமா? பாஜக பற்ற வைத்த தீ.. கொதிக்கும் காங்கிரஸ் !

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். விரைவில் இதுக்குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். 

click me!