பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய தலைமறைவாக இருந்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய தலைமறைவாக இருந்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க;- பிரியாணி பிரியர்களே உஷார்.. பிரபல ஓட்டலில் வாங்கிய பிரியாணியில் புழு.. தெனாவட்டாக பதில் கூறிய ஊழியர்கள்.!
undefined
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை தமிழக பாஜகவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி லாரி கடத்தல் வழக்கில் பாஜக நகர தலைவர் பரமகுரு, தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன், சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள பாரதமாதா நினைவு ஆலயத்திற்கு பூட்டை உடைத்தத வழக்கில் பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆத்திரம்.. பட்டியலின சிறுவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்..!