என் தந்தைக்கும் மகாத்மா காந்திக்கும் இருந்த மோதல் என்ன..? மனம் திறந்த நேதாஜி மகள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 17, 2021, 3:29 PM IST
Highlights

இந்தியாவின் சுதந்திரத்திற்கு வன்முறையற்ற கொள்கை மட்டுமே காரணம் என்று சில காங்கிரஸ் உறுப்பினர்கள் நீண்ட காலமாகக் கூற முயன்றார்கள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் பாஃப், நேதாஜியைக் கட்டுப்படுத்த முடியாது என்று காந்தி நினைத்ததால் தனது தந்தைக்கும் மகாத்மா காந்திக்கும் கடினமான மோதல் இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,  "என் தந்தை காந்தியின் மீது அதீத பற்றுக் கொண்டு இருந்தவர்’’ எனத் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் நேதாஜியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறிய கருத்து குறித்து இப்போது நேதாஜியின் மகள் அனிதா மனம் திறந்துள்ளார். 

“நேதாஜி மற்றும் காந்தி ஆகிய இருவருமே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய மாபெரும் ஹீரோக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் ஒன்றும் செய்திருக்க முடியாது. இது ஒரு கலவையாக இருந்தது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு வன்முறையற்ற கொள்கை மட்டுமே காரணம் என்று சில காங்கிரஸ் உறுப்பினர்கள் நீண்ட காலமாகக் கூற முயன்றார்கள். ஆனால், அது போல் இல்லை.

நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம் நடவடிக்கைகளும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பங்களித்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மறுபுறம், நேதாஜியும், ஐஎன்ஏவும் மட்டுமே இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டுவந்தனர் என்று கூறுவது முட்டாள்தனமானது. நேதாஜி உட்பட பலரை காந்தி ஊக்கப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு மில்லியன் கணக்கான மக்கள் பங்களித்தனர்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங் ஆகியோருக்கு மகாத்மா காந்தியிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மற்றொரு கன்னத்தை காட்டுவது சுதந்திரம் அல்ல என்று கூறி அவரது அஹிம்சையை கேலி செய்ததாக கங்கனா ரனாவத் கூறியிருந்தார். 

கங்கணா ரணாவத், கடந்த வாரம் இந்தியாவின் சுதந்திரத்தை பிச்சை என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2014 இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சுதந்திரம் கிடைத்ததாக அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கங்கனா ரணாவத், மகாத்மா காந்தி குறித்து கூறுகையில், "உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்" என்று கூறினார்.

2014ல் தான் சுதந்திரம் கிடைத்தது, 1947ல் இல்லை என்று கங்கனா கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அனிதா சுதந்திரத்தை ஒருதலைப்பட்சமாக பார்ப்பது அப்பாவித்தனம் எனக் கூறினார்.

click me!