பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லையா? விளக்கம் அளித்தார் அமைச்சர் சக்கரபாணி!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 3:07 PM IST
Highlights

பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்புடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் என்றும் அதன்படி 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தை 1 ஆம் தேதி நம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டிற்கு வெளியே பொங்க பானையில் பொங்கல் வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்தார். இதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். அதன் வரிசையில் தற்போது தமிழக அரசு பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள போதும் முன்கூட்டியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடி 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து கோட்டை வட்டாரத்தில், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற உடன் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது என்றும் அதனால் இம்முறை ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டதோடு, 20 வகையான பொருள்கள் வழங்கப்படுவதால் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது.  இதற்கிடையே, பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல்  பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் என்றும் அதன்படி 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

click me!