Jai Bhim:சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு.. பாமக மாவட்ட செயலாளரின் ஆணவ பேச்சுக்கு ஆப்பு வைத்த போலீஸ்

By vinoth kumarFirst Published Nov 17, 2021, 2:30 PM IST
Highlights

ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு  வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.

நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்படி இருந்த போதிலும் ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- அன்புமணிக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொன்னீங்க.. பாரதிராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ஜி.ராமகிருஷ்ணன்..!

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் பரிசு  வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி நடிகர் சூர்யா நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலகங்கள் ஆதரவு தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- உங்கள் தகுதிக்கு இது தேவையா? சூர்யாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பாரதிராஜா.. அன்புமணிக்கு பரபரப்பு கடிதம்.!

இதையும் படிங்க;-Jai Bhim: பாமக ரவுடி கும்பலிடம் இருந்து சூர்யாவை காப்பாற்றுங்கள்.. ஸ்டாலின் அரசை நெருக்கும் விசிக..!

இந்நிலையில், நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!