வருங்கால பிரதமரே... திருமாவளவனை திணறடிக்கும் விசிக தொண்டர்கள்..!

Published : Aug 14, 2021, 02:14 PM IST
வருங்கால பிரதமரே... திருமாவளவனை திணறடிக்கும் விசிக தொண்டர்கள்..!

சுருக்கம்

திருமாவளவனை குறிக்கும் வகையில் வருங்கால பிரதமரே என அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை எம்.பி.,யுமான திருமாவளவன் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் சுவரொட்டிகள், கட்-அவுட்களைவைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் நகரம் அரிக்காரம்பாளையத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் திருமாவளவனை குறிக்கும் வகையில் வருங்கால பிரதமரே என அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர், முதல்வரே என்று போட்டிருந்தால் சுளுக்கு எடுத்திருப்பார்கள். அதனால் தான் பிரதமரே என்று போட்டு விட்டனர்’’ எனக் கூறியுள்ளார். மற்றொருவர், மோடி எல்லாம் ஆகும் போது; இவர் எல்லாம் 1000 மடங்கு மேல’ எனத் தெரிவித்துள்ளார்.
  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!