
நகர்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெருந்தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். பிரதமரின் நிர்வாக தோல்வியால் தற்போது மீண்டும் முழு ஊரடங்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழை எளியோரின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக நிதியுதவி அளிப்பது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.