அதிர்ச்சி... முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று..!

By vinoth kumarFirst Published May 7, 2021, 11:05 AM IST
Highlights

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

click me!