
கடந்த 5 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்வில்லை. இதனால் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சென்னையில் கூடுதலாக 30 மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்துகள் இயக்கம் தடைபட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமித்து தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனாலும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகளும், பொது மக்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
இதனால் சென்னையில் பொது மக்கள் மிசார ரயிலை பயன்படுத்த் தொடங்கியுள்ளனர். மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து மின்சார ரயில்களில் கூட்டத்தை சமாளிக்க நாளை முதல் ஸ்ட்டிரக் முடிவுக்கு வரும் வரை கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.