From the India Gate: ராஜஸ்தான் ராஜா ராணி போட்டியும் கர்நாடக தேர்தல் வியூகங்களும்

By SG Balan  |  First Published Mar 12, 2023, 2:51 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 17வது எபிசோட்.


குப்பையில் ஊழல்!

எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் இருந்து வரும் அடர்ந்த புகையால் அரசியலில் ஊழல் துர்நாற்றம் வீசுகிறது. கேரளாவின் வணிக மையமாக விளங்கும் பகுதியில் கடந்த 11 நாட்களாக பிளாஸ்டிக் குப்பைகள் எரிந்துகொண்டிருக்கின்றன.

Tap to resize

Latest Videos

பிரச்சினைக்குக் காரணமானவர்கள் என மற்றவர்களைக் கைகாட்டும் ஆட்டமும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரம்மபுரத்தில் ஆலையை இயக்க ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் மற்றும் துணை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடதுசாரிக் கட்சியின் ஆசீர்வாதம் தாராளமாகக் கிடைத்துள்ளது.

ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆளும் சிபிஎம் கட்சியுடன் இருக்கும் தொடர்பு ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சிபிஎம் உயர்மட்ட தலைவரின் நெருங்கிய உறவினர். துணை ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனமும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலைவருடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் புழுத்துப்போன பிரச்சினையாக மாறிவருகிறது.

முதலில் சீமான்.. அடுத்து எடப்பாடி பழனிசாமி.. அடுத்தடுத்து வழக்குப்பதிவால் அதிர்ச்சி - கவலையில் தொண்டர்கள் !!

வியூகங்கள் பலிக்குமா?

அரசியல் வியூகம் அமைப்பவர்கள் நீண்ட கோட்டும் தொப்பியும் அணிந்து நடமாடும் ஷெர்லாக் ஹோம்ஸோ ஜேம்ஸ் பாண்டோ இல்லை.

அவர்களில் பெரும்பாலோர், காங்கிரஸின் சுனில் குன்னுகோலு போல, பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றியவர்கள் தங்கள் இமேஜ் பற்றி அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதப்பவர்கள்.

சுனில் கர்நாடகாவில் காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வியூகங்கள் வகுக்கிறார். அதற்காக 200 பேர் கொண்ட படையை தன்வசம் வைத்திருக்கிறார். உண்மையில் அவர்களின் சில பிரசார உத்திகள் ஆரம்பகட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. அவை எதிர்க்கட்சிகள்கூட பாராட்டும்படி இருந்துள்ளன.

பாஜக சுனில் போன்றவர்களை நம்பவில்லை என்றாலும் அதன் வாராஹி அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அமைதியாக தேர்தல் வேலைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்கள். அவர்கள் மக்கள்தொகை தரவுகள் அடிப்படையில் பிரத்யேகமான திட்டத்தை வகுத்து செயல்படுகிறார்கள்.

ஜேடிஎஸ் அமித் ஷாவின் பில்லியன் மைண்ட்ஸ் குழுவில் இருந்த அனில் கவுடாவை நம்பியுள்ளது. ஜே. பி. நகரில் உள்ள 70 இளைஞர்கள் கொண்ட குழு கவுடாவுன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சித்தராமையா தனது கோட்டையான கோலார் தொகுதியில் தனது சொந்த தேர்தல் வியூக குழுவை உருவாக்கி இருக்கிறார். இவர்களின் தேர்தல் வியூகங்கள் எவ்வளவு தூரம் பலிக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.

தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்

‘பஞ்சர்’ பிளான்!

நாடு முழுவதும் போலீசார் குற்றவாளிகளை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தான் காவல்துறை அதற்கு ஒரு பயனுள்ள உத்தியைக் கண்டுபிடித்துள்ளது.

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை ‘பஞ்சர் ஆக்குவது’ தான் அந்த ராஜஸ்தான் காவல்துறையின் பிளான். அதாவது, குண்டர்களை அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பஞ்சர் ஆக்குகிறார்கள்! போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இடுப்புக்குக் கீழே காயம் அடைந்தவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்களாம். ஜெய்ப்பூர், தோல்பூர், ஜுஜுனு மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் குற்றவாளிகள் இப்படி பஞ்சர் செய்யப்பட்ட பிறகு அடங்கி இருக்கிறார்கள் என்று ராஜஸ்தான் காவல்துறை கூறுகிறது.

ஆனால், போலீஸ்காரர்களை இப்படித் தூண்டிவிடுவதால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்.

ராஜா ராணி போட்டி

ராஜஸ்தானில் ராஜாவும் ராணியும் சிம்மாசனத்தைப் பிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள். போட்டியிடும் இரண்டு பேரும் வலுவான கைகள்தான். மாநிலத்தில் நடைபெற்ற சக்தி பிரதர்ஷன் நிகழ்ச்சிகள் அவர்களது பலத்தை பறைசாற்றுகின்றன.

முதலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தான் களமிறங்குவதை அறிவித்தார். அவரது பிறந்தநாளுக்கு ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி, தனக்கு இருக்கும் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை காட்டினார்.

ராஜாவும் வெகு தொலைவில் இல்லை. சிந்தியா முதல்வராவதை பலரும் விரும்பவில்லை என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள்தான். இருவரும் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். இந்த ராஜா ராணி போட்டியில் மாட்டிக்கொண்டு 'இங்கே போவதா அங்கே போவதா' என்ற குழப்பத்தில் தவிக்கும் தொண்டர்களின் பாடு சிரமம்தான்.

திமுக ஒரு கார்ப்பரேட்.! ஸ்டாலின் சாதனை இதுதான்.. ஓபிஎஸ் யாரு தெரியுமா.? எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லிட்டாரே!

கேக் வெட்டுவாரா கெலாட்?

புதிய மாவட்டங்களை உருவாக்குவது கேக் வெட்டுவது போல் எளிமையாக இருந்தால் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ரொம்ப வசதியாகப் போயிருக்கும்.

‘எங்கள் பகுதியை புதிய மாவட்டமாக அறிவிப்பது எப்போது?’ என்பதான் முதல்வர் எங்கு சென்றாலும், அவரை நோக்கி எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. இந்தக் கேள்விக்கு கெலாட்டிடம் வெளிப்படையான பதில் ஏதும் இல்லை.

இத்தகைய வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன், இன்றைய இணைய யுகத்தில் பொதுமக்கள் எதையும் எளிதில் மறந்துவிடுவதில்லை என்பதை முதல்வர் கெலாட் உணர்ந்திருக்க வேண்டும். பட்ஜெட் மிகவும் மோசமாக இருப்பதால் ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்க சாதகமாக சூழல் இல்லை. அதே சமயத்தில் முதல்வர் தொடர்ந்து அமைதி காத்தால், மக்கள் விரைவில் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிடுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர் சமையல்

தமிழ்நாடு கலவையான உணவுக்குப் பேர் போனது. ஆனால் வறுத்தெடுத்த பன்னீரை அரசியலில் மட்டுமே காணலாம்.

இந்த பதார்த்தம் சமீபத்தில் தேனி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஒரு அரசியல் தலைவரின் புதிய அரசியல் சமையல் முயற்சி புளித்துப்போன முடிவை எட்டி இருக்கிறது. அவர் தன் சமையலை கொங்குநாட்டு உணவில் விரும்பும் காவி கட்சித் தலைவர்களுக்கு பரிமாற விரும்பினார்.

ஆனால் அதிகம் பேர் அவரது சமையலை ரசிக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர் புதிய வழியைத் தேடவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

40 ஆண்டு ஆலமரம்.. பசுமைத்தாயகத்தின் கோரிக்கை.! இதோடு கடமை முடியல - அன்புமணி ராமதாஸ் உருக்கம்

click me!