நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஈரோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல பகுதிகளில் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு பரப்புரை கூட்டத்தில், வடமாநிலத்தவர் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைப்பேன் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் சீமான் மீது 153 (B) (c), 505(1) (c) ,506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்
நேற்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரச்சாந்த் கிஷோர், சீமான் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.? முழு விபரம்
இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்