From the India Gate: தமிழ்நாட்டில் மோதல்! மேற்குவங்கத்தில் பாசம்! அடுத்த தலைமை செயலாளர் யார்? அரசியல் கிசுகிசு

By Asianet TamilFirst Published Jan 10, 2023, 8:12 PM IST
Highlights

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 7வது எபிசோட்.

மம்தாவின் திடீர் பாசம்

மேற்குவங்கத்தில் புயலுக்குப் பின்னர் தற்போது அமைதி நிலவுகிறது. புதிய கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் உடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நல்ல நட்பில் இருக்கிறார். ஆதலால், மேற்குவங்கத்தில் எந்த புகைச்சலும் இல்லை. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஜக்தீப் தங்கல் ஆளுநராக இருந்தபோது தினமும் மோதல் வெடித்து வந்தது. 

எங்கே தங்கல் போல் தனக்கு தினமும் புதிய ஆளுநர் தடங்கல் ஏற்படுத்துவாரோ என்று பயந்து இருந்த மம்தாவுக்கு நம்பிக்கை கொடுத்தவரே உள்துறை அமைச்சர் அமித் ஷா தானாம். ``அவர் ஒரு நல்ல மனிதர்'' என்று உறுதியளித்த பின்னர், ஆனந்த போஸை முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்த மனதுடன் வரவேற்றுள்ளார்.

ஆனால் மம்தா இரண்டு அன்பான கட்டளைகள் பிறப்பித்துள்ளார். முதலாவதாக, ''நீங்கள் தொடர்ந்து கேரள உணவை ரசிக்கலாம்'' என்று போஸிடம் மம்தா கூறியுள்ளார். ஆனால், தனக்கு பெங்காலி ரெசிபி மிகவும் பிடிக்கும் என்று போஸ் பதிலளித்துள்ளார். தொடர்ந்து பரிந்துரைத்த மம்தா. ``மேடம் (லட்சுமி ஆனந்த போஸ்) நான் என்ன பரிந்துரைக்கிறேன் என்பதை புரிந்துகொள்வார். கேரளாவில் இருந்து சமையல்காரர் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். தயக்கம் வேண்டாம். மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும்'' என்று முடித்துள்ளார். 

இத்துடன், சலுகை அறிவிப்பை மம்தா நிறுத்தவில்லை. அடுத்து, ''நீங்கள் விமானத்தில் பறக்க வேண்டுமா? அதுவும் நாங்களே செய்கிறோம்'' என்று உறுதி அளித்துள்ளார். பொதுவாக மம்தாவுக்கு மாநில அரசு விமானங்களை குத்தகைக்கு எடுக்கும். அதுபோல், ஆளுநருக்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கட்டளை பறந்துள்ளது. ஆனால், ஆளுநர் இன்னும் அதுகுறித்து முடிவு எதையும் எடுக்கவில்லையாம். 

நீங்கள் கேரளாவுக்கு வேண்டுமானாலும், விமானத்தில் சென்று வரலாம் என்று மம்தா தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை இன்னும் ஆளுநர் ஏற்றதாக தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது என்று பலர் கருதினாலும், புயலுக்கு முன்பு ஒரு அமைதி இருக்கும் என்று கிண்டலடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க..From the India Gate : அழகான முதல்வர் வேட்பாளர் முதல் ஆயுர்வேத ரிசார்ட் சர்ச்சை வரை - அரசியல் சலசலப்பு !!

கேரளாவில் என்ன நடக்குமோ திக் திக் நிமிடங்கள்... 

மேற்குவங்கத்தில் மட்டுமில்லை அமைதி அலை கேரளாவிலும் வீசத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. கேரள அரசியலில் என்ன நடக்குமோ என்று கிளைமேக்ஸிற்காக காத்துக் கிடந்தவர்களுக்கு, இறுதியில் சப்புன்னு ஆகிடுச்சு. சஜி செரியனை மீண்டும் பினராயி அமைச்சரவையில் அமைச்சராக்குவதற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புக்கொண்டதால், எல்லாம் சரியான வழியில்தான் செல்கிறது என்று கேரள மக்களை நினைக்க வைத்துவிட்டது. இந்திய அரசியலமைப்பை சிறுமைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்த சஜி சில மாதங்களுக்கு முன்பு பதவி விலக நேரிட்டது.

போலீஸ் விசாரணையில் சஜிக்கு க்ளீன் சிட் கொடுத்தாலும், பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தருணத்தில் ஆளுநர்  இந்த விஷயத்தை சட்ட நிபுணர்களின் கருத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால். என்ன நடக்குமோ என்று ஆளும் கட்சியினர் திகிலில் இருந்தனர். ஆனால் சட்ட சிக்கல் இல்லை என்று கிரீன் சிக்னல் கொடுத்தவுடன், ஆரிப் கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அரசாங்கமும் நேர்மறையான சிக்னலை ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் உரையை தவிர்க்கும் நோக்கத்தில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரை, ஆண்டு இறுதி வரை தொடர, முன்பு கேரள அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால் பனி உருகியதால், புதிய ஆண்டில் ஆரிப் கான் சபையில் உரையாற்றுவதற்காக அரசு முடிவு செய்து வைத்து இருக்கிறது. இது அமைதியான கூட்டமாக இருக்குமா அல்லது தமிழக சட்டசபையில் நடந்தது போன்று இருக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கேரள அரசியல்வாதிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

கடைசியில் எல்லாம் போச்சு

மிகப் பெரிய மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வேண்டும் என்பவது ஒருவரின் லட்சியமாக இருந்தது. பல மூத்த அதிகாரிகள் அதிக நம்பிக்கை வைத்திருந்தாலும், கடந்த காலத்தில் இந்த நாற்காலியில் இருந்த ஒரு அதிகாரியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது என்று கூற வேண்டும்.

ஏறக்குறைய அந்தப் பட்டியலில் இருந்த பலரும் மூத்த அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருக்க தொடங்கினார்கள். ஆனால், தற்போதைய தலைமைச் செயலாளரின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்ததன் மூலம் அனைத்துக் கனவுகளும் சிதைந்தது.

இதையும் படிங்க..From the India Gate: இவருக்கு முடி நரைத்தாலும் பதவி ஆசை விடலை; தேவ கவுடா குடும்பத்தில் போட்டா போட்டி!!

குடும்ப சர்க்கஸ்

உ.பி.யில் கட்சி மாற்றம், காட்சி மாற்றம் அரங்கேறுகிறது. மூத்த அரசியல்வாதியான ஷிவ்பால் யாதவ், குடும்பம் மற்றும் கட்சியுடன் மீண்டும் இணைவதால், இப்போது பாஜகவில் உள்ள ஒரு முக்கிய தலைவர் மீது அந்த பார்வை விழுந்துள்ளது.  பாஜக தலைமை மற்றும் கொள்கைகளுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டதற்காகவும், விமர்சனக் கருத்துகளை வெளியிட்டதற்காகவும் அவர் சில முறை கண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் தனது உறவினரும், சகோதரி மற்றும் காங்கிரஸில் வளர்ந்து வரும் பெண் தலைவருடன் கலந்துரையாடி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் அவர் பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைவார் என்ற வதந்தி பரவி வருகிறது.  ஆனால் அவர் விலகுவது காவி கட்சியில் உள்ள பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை. பிரபல குடும்பப் பெயர் கொண்ட இந்த எம்.பி குறித்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதையும் படிங்க..From the India Gate: அமித் ஷாவை பார்த்தால் தெரியாது...ஆனால் அமைதியாக பஞ்சாயத்து செய்துவிடுவாராம்!!

click me!