இந்தியா கேட்டில் இருந்து... இரண்டு சேனல்களும், மியூசிக் நாற்காலியும்... வாரிசு எடுப்பதுதான் இறுதியாம்!!

By Asianet TamilFirst Published Dec 18, 2022, 9:47 AM IST
Highlights

இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான முதல் எபிசோட்.

இரண்டு சேனல்களும், மியூசிக் நாற்காலியும்...

ராஜ்யசபா மற்றும் லோக்சபா டிவி சேனல்கள் சன்சத் டிவியுடன் இணைக்கப்பட்டதிலிருந்து, இரண்டு அதிகார பீடங்களில் திரைமறைவு வேலை நடந்து வருகிறது. இதுவரை, மாநிலங்களவையிடம் சன்சத் டிவி ஒளிபரப்பின் அதிகாரம் ஓங்கி இருந்தது. சமீபத்தில் அதிகார பீடத்தின் இரண்டாம் இடத்திற்கு வந்த புதியவர் இந்த அதிகாரத்தை தட்டி பறித்துக் கொண்டார். அதிகார அந்தஸ்தின்படி அந்த நபர் இரண்டாம் இடத்தில் இருக்க, சபாநாயகர் 6வது இடத்தில் இருக்கிறார். 

இந்த இருநபர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இருவரும் தங்களது அதிகாரத்தையோ, சன்சத் டிவியில் தாங்கள் மட்டுமே அதிக நேரம் தெரிய வேண்டும் என்பதையோ விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. திரைமறைவில் ஒரு போட்டியே நடந்து வருகிறது. இது இருதரப்பிலும் அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தலைவலியை கொடுத்துள்ளது. தங்களது முதலாளி அதிக நேரம் திரையில் தெரிய வேண்டும் என்பதில் விசுவாசம் செலுத்தி வருகின்றனர். மேலும், எவ்வளவு நேரம் தங்களது முதலாளி திரையில் தெரிகிறார் என்று கணக்கெடுத்து வருகின்றனார். ம்ம்ம்ம்... அப்படியே சமோசா சாப்பிட்டுட்டே இன்னொரு சங்கதியும் சொல்றேன் வாங்க...

Rahul gandhi yatra: ராகுல் காந்தி தேசத்துக்கே அவமானம்!காங்கிரஸிலிருந்து நீக்குங்கள்: கார்கேவிடம் பாஜக காட்டம்

பார்வையில்பட்டது..

விழா என்னமோ விஜய் திவாஸ்... ராணுவ அலுவலகத்தில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே நடத்திய வருடாந்திர நிகழ்வில் சம்பிரதாய சீருடைகள் மற்றும் மின்னும் பதக்கங்களுடன் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங்கிற்கு பின்னால் ஜெனரல் வி.கே. சிங் வந்து அமர்ந்தார். தடால் என இவர் முன் வரிசையில் இருந்து இடது ஓரத்திற்கு தள்ளப்பட்டார். கண் அசைவில், உடல் அசைவில் இதற்கான சிக்னலை கொடுத்தவர் அந்த இணையமைச்சர்தான். இது பகிரங்கமாகவே தெரிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி அரங்கிற்குள் நுழைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு இது நடந்தது. இருப்பினும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வளாகத்தைச் சுற்றிச் சென்று அனைத்து பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்தினர். ஜனாதிபதி முர்மு அரங்கிற்குள் நுழைவதற்கு முன்பு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உடன் பிரதமர் மோடி,  விவாதத்தில் ஈடுபட்டது கூடுதல் தகவல்.  மொபைல் போன்கொண்டு செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் பிரதமருடன் உற்சாகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


சிந்தனையை தூண்டிய புகைப்படம்..

சில நேரங்களில் எழுதப்படும் வார்த்தைகளை விட, சில புகைப்படங்கள் நமது சிந்தனையை தூண்டிவிடும். அப்படி இரண்டு படங்கள் அமைந்து இருக்கின்றன. அவை தற்போது வைரலாகி வருகின்றன. 

இடது-வலது-இடது: முதலாவதாக, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, பிரதமர் நரேந்திர மோடியுடன் சிரித்துப் பேசி கலகலப்பாக கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர். உண்மையில், சொல்லப்போனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு இடையே மோடி சிக்கினார்.  பாஜக தொண்டர்களுக்கு, குறிப்பாக கேரள பாஜகவினருக்கு இந்த புகைப்படம் பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. அப்படி என்னதான் பிரதமர் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருப்பார் என்பதை அறிந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் ஆவலாக இருந்தனர்.  

அப்படி என்ன பேசினீர்கள் என்று பிரதமரிடம் யாரும் கேட்க முடியாது. ஆனால், அந்த கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் கேட்டுப் பெறலாம். அதைத்தான் அவர்களும் செய்தனர். அதற்கு அவர்கள் கூறிய பதில், மோடியின் குறும்புத்தனமான பேச்சு அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது என்று தெரிவித்துள்ளனர். "நான் உங்களை அடிக்கடி பார்ப்பதில்லை; ஒருவேளை நீங்கள் என்னிடமிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கலாம்  இல்லையா?" என்று மோடி கையைப் பிடித்து இழுத்து கேட்க, இரண்டு தலைவர்களும் சிரித்து விட்டனராம். இந்த புகைப்படம் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் கொடுத்து இருந்தது.

டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ

பிரதமரும் தேவகவுடாவும்... 

இரண்டாவது புகைப்படத்தில் வீல் சேரில் அமர்ந்து இருக்கும் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா உடன் பிரதமர் மோடி சிரித்து பேசிக்கொண்டு  இருக்கிறார். தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடகா மாநிலத்தின் இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் விவாதித்ததாக தேவகவுடா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து இருந்தார். இந்த சந்திப்பும் கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இவர்களது இந்த சந்திப்பும், பழைய அரசியல் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது... கடந்த 1996ஆம் ஆண்டில் 11வது பிரதமராக தேவகவுடா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதைத்தான் பின்னர் வரலாற்று தவறு என்றும் கூறப்பட்டது (சிபிஎம் இவ்வாறு கூறி இருந்தது). 

மறைந்த அரசியல் தலைவர் வி.பி. சிங்கின் பெயர் முதலில் அடிபட்டது. ஆனால், அவரோ கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக இருந்து மறைந்த ஜோதிபாசுவை முன்மொழிந்தார். ஜோதிபாசு அப்போது மேற்குவங்கத்தின் முதலமைச்சராக இருந்தார்.  ஆனால், இதை இரண்டு முறை சிபிஎம் மத்திய கமிட்டி நிராகரித்தது. புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் மற்றொரு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், தேவகவுடா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே மூப்பனாரை ஜோதிபாசு தேர்வு செய்தார். அவர் ஜிகே மூப்பனாருக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார். மூப்பனாரை தேர்வு செய்வதற்கு முன்பு அருகில் இருந்த ப.சிதம்பரத்திடமும் ஜோதிபாசு ஆலோசனை பெற்றார். 

மூப்பனாரின் பெயரை பரிந்துரைப்பதில், சிதம்பரம் உடனடியாக திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. அப்போது ஜோதிபாசு தேவகவுடா பெயரை பரிந்துரை செய்தார். ஆச்சரியமடைந்த தேவகவுடா, ''எனது பெயர் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, இதை எனது தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தார். அந்த தலைவர் லாலு பிரசாத் யாதவ்.  தனக்கே உரிய ஸ்டைலில் கால் மீது கால் போட்டு அமர்ந்து இருந்த அவரும் வேண்டா வெறுப்பாக தேவ கவுடாவை தேர்வு செய்ததாக அப்போது பேசப்பட்டது. சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது. தேவ கவுடாவும் பிரதமரானார். 

இன்றைய சில புகைப்படங்களும் பழைய நினைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. 

மீசையை முறுக்கும் அந்தத் தலைவர்...

மீசையை முறுக்கிக் கொண்டு உள்ளூரில் உலா வரும் தலைவர் தலைநகரில் உள்ள தலைவர் 3 மாநிலங்களில்  வெற்றி பெற்று தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றது போல் நாமும் பெற வேண்டும் என்று  வரிந்து கட்டி நிற்கிறராராம்.  வடக்கே தலை வைத்தால் வேலைக்கு ஆகாது என்பதை பல்ஸ் பார்த்த அவர், தெற்கே உள்ள  3 மாநிலங்களில்  சிலரை தி்ரட்டி காய் நகர்த்தி அச்சாரம் போட திட்டமிட்டாராம். 

அக்கம் பக்கம் உள்ள மாநிலங்களில் அரசல் புரலாக பேசி  எப்படியாவது அடுத்த தேர்தலில் பேரம் பேசவும், அடுத்தடுத்த வரும் தேர்தலில் அங்கீகாரம் பெறவும் அம்பு விட்டு வருகிறார். இதற்காக அண்டை மாநிலத்தில் கொடி கட்டி பறக்கும் முதலமைச்சரை அண்மையில் பார்த்து அச்சராம் போட்டு வந்தார். ஆனால் அவரது கனவில் மண்ணைப் போடும் வகையில், அவர் சார்ந்த சமூகத்தினர் செய்யும் பஞ்சாயத்து தலைவலியை கொடுத்துள்ளதாம். முதற்கட்டமாக அண்டை மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த  திட்டமிட்டு,  பண முதலையாக வலம் கட்சி நிர்வாகிகளுக்கு தூண்டில் விரித்துள்ளார். ஆனால், அவர்களோ, முட்டுக் கட்டை போடுகிறார்களாம். 

நம் சமுகத்தைச் சேர்ந்த ஒருவரை முன் நிறுத்தினால் வேலை செய்வோம் என்று கறராக கூறியதால் விழி பிதுங்கி நிற்கிறராராம் மீசை முறுக்கும் தலைவர். எப்படியாவது அடுத்த சில கட்ட முயற்சியில் அண்டை மாநிலத்தில் கால் பதித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடா நம்பிகையில் இறங்கியுள்ளாராம். 

 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் கணிப்பு


தமிழ்நாடு கோட்டையில் இருந்து செங்கோட்டைக்கு...

கோட்டையில் ஆளும் அரசர், செங்கோட்டை தேர்தலுக்கு தயாராவதற்காக தனது வாரிசு கையில் அனைத்து பொறுப்புகளையும் கொடுக்க முடிவு செய்து விட்டாராம். அமைச்சர் பதவி மட்டுமே தனது வாரிசை ஆதரிக்காது என்பதை உணர்ந்து கொண்ட அரசர் நேரடியாக தனது வாரிசு எடுக்கும் முடிவுதான் இறுதி என்பதை கட்சி நிர்வாகிக்கு உணர்த்த திட்டமிட்டுள்ளாரம்

மல்லிகைப்பூவுக்கு பெயர் போன ஊரைச் சேர்ந்த கஜானா மந்திரி ஆலோசனையின்படியே பால், மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டதாம். ஆனால் அதற்கு அரசர் தயக்கம் காட்டிய நிலையில், வாரிசு தான் இதை தவிர்க்க முடியாது என எடுத்து சொன்ன பிறகு பச்சை கொடி காட்டப்பட்டதாம். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது, அதனால் தற்போது விலையை உயர்த்தி விடலாம்... மார்ச் மாதம் வரும் பெண்கள் தினத்தில், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து தேர்தலுக்கு தயராகி விடலாம் என யோசனையில் உள்ளதாம் ஆளுங்கட்சி. ஆக மொத்தம் அனைத்து அதிகாரமும் வாரிசுக்கு வழங்க உள்ளதை விரைவில் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு அரசரே சொல்ல உள்ளாராம். 

நாடளுமன்ற தேர்தலில்  பெரிய அளவில் வெற்றி பெற்று அதற்கு வாரிசின் வியூகம் தான் காரணம் என சொல்லி அவருக்கு 2 ஆண்டுக்குள் துணை முதமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என்று அப்படியே செய்தி உலா வருதாம். 

சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !


கன்னம் சிவந்து கிடக்கும் சிவப்பு கட்சி..

அடுத்தடுத்து மாநிலங்களில் பலத்தை இழந்து திரிசங்கு நிலையில் இருக்கும் சிவப்பு கட்சிக்கு தமிழகம், கேரளா மட்டுமே ஓரே ஆறுதல். ஆனால் அடி மடியில் கை வைத்த கதை போல் சூரியன் கட்சியில் உறவு வைத்து பயணம் செய்வதால் அடுத்த தேர்தலில் நமது நிலைமை மோசமாகி விடும் என புலம்புகிறார்களாம் மூத்த தோழர்கள்.

கடந்த முறை ஆட்சியை பிடிக்க வாரி வழங்கிய கூட்டணி தலைமைக்கு, இனி நம் ஆதரவு தேவை இருக்காது என்பதை இப்போது சில நடவடிக்கை  மூலம் உணர்ந்து விட்டார்களாம். வாக்கு வங்கியான தொழிற்சங்கங்கள் கூட தாம் சார்ந்துள்ள சிவப்பு கட்சியின் மூலம் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று புலம்புகிறார்களாம். 

பணி செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைமைக்கு சென்றால் பார்த்து கொள்ளலாம் என்று தோழர்கள் நழுவி செல்வதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளதாம். இதனால் பலர் வேறு தொழிற்சங்கத்துக்கு தாவுகிறார்களாம்.  இதற்கு உதராணமாக தலைநகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சிவப்பு கட்சிக்கு பெயர் போன யூனியனில் தலைமை பொறுப்பில் இருந்து விலகி காவி கட்சியில் ஐக்கியமானவர், பலரை தன் வசம் இழுத்து விட்டாராம். 

கடந்த 10 வருடங்களாக புது முகங்கள் இல்லாமல் ஏற்கெனவே உள்ள சிலர் மட்டும் சலுகைகளையும், பொறுப்புக்களையும் அனுபவித்து வருவதால் இளைய தலைமுறை கருத்து சொல்ல முடியாமல் மவுனமாக  உள்ளார்களாம். நாங்களும் ரவுடி தான் என்று எத்தனை நாட்களுக்குத்தான் பில்டப் கொடுப்பாங்கன்னு பார்ப்போமே என தொழிற்சங்க நிர்வாகிகளும் தலைமையைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்களாம்

அடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போட இப்போதே கூட்டணியில் குடைச்சல் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்று பலர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் நெருக்கடியில் உள்ளதாம் தமிழகத்தில் சிவப்பு கட்சி.

இதையும் படியுங்கள்

ரூ.5 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்.! வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா.?அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்

click me!