இனிமேல்தான் அரசியலில் நமது எதிர்காலமே... பிரேக் போடும் பிரேமலதா..!

Published : Apr 26, 2021, 06:16 PM IST
இனிமேல்தான் அரசியலில் நமது எதிர்காலமே... பிரேக் போடும் பிரேமலதா..!

சுருக்கம்

அதிமுக கட்சி கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்ட தேமுதிக, வேறு வழியே இல்லாமல் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியோடு கூட்டணி வைத்து களம் இறங்கியது.   

அதிமுக கட்சி கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்ட தேமுதிக, வேறு வழியே இல்லாமல் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியோடு கூட்டணி வைத்து களம் இறங்கியது. 

இதில் குறிப்பிட்ட தொகுதியை கேட்டு வாங்கிய தேமுதிக கட்சி வேட்பாளர்களில் ஒருவர் கூட கரை சேர மாட்டார்கள் என அக்கட்சியினரே பேசிக்கொள்கிறார்கள். எப்படியும் இந்த தேர்தலோடு நமது கட்சி கரை சேரப்போவதில்லை. அதனால் தேர்தல் முடொவு வந்ததும், வேறு கட்சிக்கு தாவ வேண்டியது தான் என மாவட்டம் வாரியாக தேமுதிக கட்சி நிர்வாகிகள் முடிவு செய்திருகிறார்கள். 

சேலம் மாவட்டத்திலும் பெரிய அளவில் ஒரு குரூப் மாற்று கட்சிக்கு தாவ இருக்கிறார்கள். அதற்காக தூது விட்டு இருக்கிறார்கள். இதை அறிந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘’எங்கேயும் போகாதீர்கள். நமக்கான எதிர்காலம் இனிமேல்தான் இருக்கிறது. உங்கள் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் உண்டான அனைத்தும் கிடைக்கும். அவசரப்படாதீர்கள்’’ என குறிப்பிட்ட நபர்களை போனில் அழைத்து கெஞ்சி வருகிறாராம். ஆனாலும், கேப்டனுக்காகவே கட்சிக்கு வந்தோம். இனியும் உங்களை நம்புவதாக இல்லை என எதிர்த்துப்பேசி கடுப்படித்து வருகிறார்களாம்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!