சுதந்திரம் என்பது என்ன தெரியுமா? ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2020, 2:14 PM IST
Highlights

விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்கு முறையிலிருந்து விடுபடுவதே என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கூறியுள்ளார்.

விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்கு முறையிலிருந்து விடுபடுவதே என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கூறியுள்ளார்.

74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, கொரோனாவுக்கு விரைவில் தடுப்பூசி விரைவில் மக்களுக்கு அளிக்கப்படும் என்றும் கொரோனாக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில்;- எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு.

சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

click me!