திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2020, 1:30 PM IST
Highlights

தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை உள்ளன. இதே போல்அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அமைந்த இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்கும் என்று இரு கூட்டணி தலைமைகளும் தெரிவித்து வருகின்றன. ஆனால் தொகுதி பேரம், கூட்டணி ஒப்பந்தம் போன்றவை அமையும் விதத்தை பொறுத்தே சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணிகள் நீடிக்குமா என்பது தெரிய வரும். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி வியூகம், சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி வியூகம் என்று தான் பெரும்பாலான கட்சிகள் செயல்படும்.

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்கிறார்கள். அதே சமயம் திமுக கூட்டணிக்கு பாமக வரும் பட்சத்தில் அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் இருக்க முடியாது. இதே போல் எதிர்பார்க்கும் தொகுதிகளை வழங்கவில்லை என்றால் பாமகவும் அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. இதே போல் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட திமுக குறைவாக ஒதுக்கினால் மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை பாஜக எங்கு உள்ளதோ? அங்கேயே இருந்து மாநிலங்களவை தேர்தலில் சுதிசுக்கு ஒரே ஒரு எம்பி பதவியை பெற்றுவிடும் கணக்கு போட்டு வைத்துள்ளது. எனவே தேமுதிக திமுக கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. இதே போல் வைகோவும் திமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்புவார். ஆனால் மரியாதைக்குறைவான அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் வைகோவும் வேறு முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. எனவே தற்போதுள்ள கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்கும் என்று யாரும் 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டணி தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி திமுகவில் தற்போது உட்கட்சிப்பூசல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கனிமொழி திமுகவில் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காகவே உதயநிதியை ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பதவியில் நியமித்துள்ளதாகவும் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் தற்போது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளால் திமுகவில் மிகப்பெரிய பிளவு தேர்தல் சமயத்தில் ஏற்படும் என்றும் கடம்பூர் ராஜூ கணித்துள்ளார்.

அதே போல் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் சமயத்தில் வெளியேறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் சமயத்தில் வெளியேறும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எந்த கட்சி என்பதை தெரிவிக்கவில்லை. கூட்டணி பேச்சின் போது அதிருப்தி ஏற்பட்டு கடைசி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளன. உதாரணமாக 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது. இதே போல் அதே தேர்தலில் மதிமுகவும் கடைசி நேரத்தில் திமுகவில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்துஅப்போது வெளியேறின. இதனை மனதில் வைத்து தான் அமைச்சர் கடம்பூர்ராஜூ தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறும் என்று கூறியுள்ளார்.

click me!