அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Aug 15, 2020, 1:12 PM IST
Highlights

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீரமைக்கப்பட்ட வேலூர் புதிய மாவட்டத்தில், அதிமுகவை பலப்படுத்த வியூகம் வகுத்திருக்கிறது அந்தக் கட்சியின் தலைமை. இதற்காகவே, அமைப்புரீதியாக திமுகவைப்போலவே அதிமுகவிலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை நான்காகப் பிரித்துள்ளனர். மாநகர மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர மாவட்டச் செயலாளராக வேலழகன் ஆகியோரை நியமித்துள்ளனர். இதில், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் பெரிதும் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜயனுக்கு மருத்துவ அணியில் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற வந்த புதிய மாவட்டச் செயலாளர் அப்புவை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் விஜய் மீது புகார் எழுந்தது. மேலும், அவர் அதிருப்தியில் இருப்பதால் விரைவில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பியாகவும் உள்ள கதிர் ஆனந்திடம் விஜய் பேசியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதில், கழக பொருளாளர் துரைமுருகன், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

click me!