தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை .!! தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.!!

By T BalamurukanFirst Published May 24, 2020, 8:01 PM IST
Highlights

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்?

மதுரை மேற்குதொகுதி அமைச்சர் செல்லூர் ராஜு சொந்த தொகுதி என்பதால் தொகுதிக்குள் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இன்று அவரது தொகுதிக்குள் இருக்கும் பெத்தானியாபுரம் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை கபசுரகுடிநீர் மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்.."


மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் திறம்பட பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க பரிசோதனைகளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி. விவசாயிகளின் கஷ்டம் என்னவென்று தெரிந்தவர். எனவே இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்காது.விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை. இப்படி இருக்கும்போது காங்கிரஸ் போராட்டம் என்பது தேவையற்றது. காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதை மக்களிடம் காட்டிக்கொள்ளவே இதுபோன்று நடந்து கொள்கிறார்கள்.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? ஒன்றும் செய்யவில்லை. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.என்றார்.
 

click me!