எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வின் திறமையை புகழ்ந்து தள்ளிய அதிமுகவின் சீனியர்.. சமூக வலைதளங்களில் வைரலாக்கும் திமுக

By vinoth kumarFirst Published May 24, 2020, 6:34 PM IST
Highlights

தனியார் தொலைக்காட்சி விவாதம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியரான செம்மலை திமுக எம்.எல்.ஏ.வின் திறமையை புகழ்ந்து பேசிய வீடியோ பதிவை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

தனியார் தொலைக்காட்சி விவாதம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியரான செம்மலை திமுக எம்.எல்.ஏ.வின் திறமையை புகழ்ந்து பேசிய வீடியோ பதிவை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

அதிமுகவில் எம்.எல்.ஏ. சீட் இல்லையென்றவுடன், 1980ஆம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக நின்று வென்றுகாட்டி எம்.ஜி.ஆரை அதிரவைத்த எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி, முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர், அதிமுகவின் சீனியர் போன்ற பெருமைகளுக்கு உரியவர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை. பிரபல தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தில் பேசிய அவர் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மாநில அரசுகளை மத்திய அரசு ஒடுக்குவதாக தெரிவித்திருந்தார். 

மாநிலங்களுக்கு தேவையான அளவு நிதி  கிடைக்கவில்லை கொடுக்கப்படவில்லை என்பதையும் ஆணித்தரமாக பேசினார். மேலும், அவர் பேசும் போது, திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் பொருளாதார துறையில் சிறந்த ஆற்றல் உடையவர். சட்டமன்றத்திலும் தியாகராஜன் விவாதம்  சிறப்பாக செய்வார். விதண்டாவாதமாக அவர் பேசியது கிடையாது.

செம்மலை மட்டுமல்ல  2016 ல் முதன் முதலாக சட்டமன்றம் சென்று ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக தன் கருத்தை முன் வைத்த திமுக எம்.எல்.ஏ.பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்களை ஜெயலலிதாவே அவரது ஆங்கிலப்புலமையையும் கருத்துக்களை வைக்கும் விதத்தையும்  பார்த்து அசந்து ஆச்சர்யப்பட்டு போனாராம். இது அப்போதைய வார இதழ்களில் செய்தியாகவும் வந்தது.

இன்று எம்.எல்.ஏ.வாக உள்ள தியாகராஜன் அவர்களின் தந்தையார் பண்பாளர் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். எதிர்க்கட்சியினர் கூட பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்களை நடுநிலை தவறாத சபாநாயகர் என்று பாராட்டியுள்ளனர். இன்று தந்தையை போலவே எதிர்க்கட்சியினரும் பாராட்டும் அளவிற்கு தன் கருத்தை நாகரீகமாக புள்ளி விபரங்களுடன் பதிவு செய்துள்ளார் பி.டி.ஆர்.தியாகராஜன் என்று கூறியுள்ளார். பேர் சொல்லும் பிள்ளை என்ற சொல் வழக்கு தமிழில் உண்டு தியாகராஜன் அவர்கள் தன் தந்தையின் பாரம்பரியத்தின் பெயரை எதிர்க்கட்சி வரிசையில் நின்றே பிறர் போற்றும் படி காப்பாற்றியுள்ளார் என்று  திமுகவினர் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர். 

click me!