
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும், திமுக பதவி ஏற்றதும், வாபஸ் பெறப்பட்டன. இதில் பல ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே ஊழல், முறைகேடு வழக்குகளும் நிலுவையில் இருந்த நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. “பொதுநலனுக்காகவே போராடினேன், விதிமுறைகளை மீறவில்லை” என்ற செந்தில் பாலாஜியின் வாதம் ஏற்புடையது என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.