கொஞ்சம் கொஞ்சமாகதான் சரி செய்ய முடியும்.. அமைச்சர் பிடிஆரை தூக்கி பிடிக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.!

By vinoth kumarFirst Published Aug 20, 2021, 1:24 PM IST
Highlights

தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பதை நிதியமைச்சரும் அரசும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். படிப்படியாகத்தான் நிதி நிலைமையைச் சீரமைக்க முடியும். அதற்கு முதல் படி இந்த நிதி நிலை அறிக்கை என்றார். 
 
தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவரது சிலைக்கு ப.சிதம்பரம்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து நான் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருக்கிறேன். 

தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பதை நிதியமைச்சரும் அரசும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். படிப்படியாகத்தான் நிதி நிலைமையைச் சீரமைக்க முடியும். அதற்கு முதல் படி இந்த நிதி நிலை அறிக்கை என்றார். 

தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் படிப்படியாக நிறைவேற்றுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். அதன் அடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கையில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். தமிழக பட்ஜெட்டில் திமுகவின் சமுதாய பார்வை அழுத்தமாகவே உள்ளது. அதை பாராட்டுகிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

click me!