பொய் வழக்கா இல்லையா என்பதை நீதிபதி தான் கூற வேண்டும்.. எடப்பாடியாரை ஓங்கி குத்திய திருநாவுக்கரசர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2021, 12:52 PM IST
Highlights

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் உப்பைத் தின்னவர்கள் தண்ணி குடிச்சு தான் தீரவேண்டும், தவறு செய்தால் தண்டனை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்றார். 

கொடநாடு விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 77வது பிறந்தநாளையொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் உப்பைத் தின்னவர்கள் தண்ணி குடிச்சு தான் தீரவேண்டும், தவறு செய்தால் தண்டனை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்றார். மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் கூறினார்.பொய் வழக்கு போட்டப்பட்டால், யார் மீது போடப்பட்டுள்ளதோ அவர்கள் தான் தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், இவ்வழக்கு பொய்யா, இல்லையா என்பது குறித்து நீதிபதி தான் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு, இரண்டு வருடம் ஆகியும் எந்த ஒரு முடிவு கிடைக்கவில்லை என்றார். 

அதன் பின்னர் பேசிய செல்வபெருந்தகை கூறுகையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் விதி எண் 55ன் கீழ், சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் எனக் கூறினார். கொடநாடு கொலை வழக்கில் தங்கள் மீது பொய் வழக்கு போட முயற்சி நடக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் இந்த கருத்து அதிமுகவினரை அதிர்ச்சியடை வைத்துள்ளது. 

 

click me!