பேரறிவாளன் விடுதலை.. கொண்டாடுபவர்கள் எல்லாருக்கும் வக்கிரபுத்தி இருக்கு - விளாசிய நாராயணசாமி !

By Raghupati RFirst Published May 20, 2022, 4:44 PM IST
Highlights

புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் வந்து சென்றது முதல் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கேசினோ என்ற சூதாட்டத்தை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் வந்து சென்றது முதல் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கேசினோ என்ற சூதாட்டத்தை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதுச்சேரி அரசு அனுமதித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் சரணாகதியாகிவிட்டார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை அக்குடும்பத்தினர் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். பேரறிவாளன் விடுதலைக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது மனவேதனையை அளிக்கின்றது. முன்னாள் பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்ரபுத்தியை காட்டுகிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : Ration Card : உடனே இதை செய்யுங்க.. அப்படியில்லை உங்க 'ரேஷன் கார்டு' செல்லாது !

click me!