பேரறிவாளனை கட்டியணைத்தது குற்றத்திற்கு ஊக்கமளிக்கும் செயல்..! ஸ்டாலினை வம்பிழுக்கும் எச்.ராஜா

By Ajmal KhanFirst Published May 20, 2022, 4:38 PM IST
Highlights

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை சந்தித்து கட்டியணைத்த செயல் குற்றத்திற்கு ஊக்கமளிப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

பேரறிவாளன் விடுதலை- எதிர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் விடுவித்தது. இதனை திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள் கொண்டாடி வருகிறது. அதை நேரத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தநிலையில் பேரறிவாளன் விடுதலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரபராதியை விடுதலை செய்தது போல் கொண்டாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். முதலமைச்சர் உண்மையிலேயே அரசியலமைப்பு மீது சத்யபிரமாணம் எடுத்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுவதாக கூறினார். முதலமைச்சர் நேர்மையாக நடந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அப்போது தெரிவித்து இருந்தார். 

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்தவர், தங்கள் கட்சி பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை கொண்டாடியவர்களுடன் எப்படி கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வருகிறது என கேள்வி எழுப்பியிருந்தார். இதே போல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக் கொலை செயலில் ஈடுபட்ட பேரறிவாளின் விடுதலையில் உறுதியான, உணர்வுபூானமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளின் விடுதலையை பாராட்டும்; கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையையே எடுத்துக்காட்டுகிறது. மேலும் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சனையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை. என ஜி.கே.வாசன் கூறியிருந்தார்.

குற்றத்திற்கு ஊக்கமளிக்கும் செயல்-எச்.ராஜா

இந்தநிலையில் இது தொடர்பாக கருத்த தெரிவித்த எச்.ராஜா, 1999 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேரறிவாளன் செய்த குற்றங்களை பட்டியலிட்டு தண்டனை வழங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்று பேரறிவாளன் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை போல் முதலமைச்சர் பேரறிவாளனை அழைத்து கட்டியணைத்தது குற்றத்திற்கு ஊக்கமளிக்கின்ற செயல், வன்மையாக கண்டிக்கதக்கது என கூறியுள்ளார். இது தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

click me!