பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தாயார் லண்டனில் காலமானார்..! நவாஸ் செரீப் பாகிஸ்தான் வருவதில் சிக்கல்

By T BalamurukanFirst Published Nov 22, 2020, 10:26 PM IST
Highlights

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அம்மா 'பேகம் ஷமிம் அக்தர்' இன்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த ஒரு மாதமாக 'பேகம் அக்தர்' உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( பி.எம்.எல்-என்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
அவர் கடந்த பிப்ரவரியில் லண்டனுக்குச் சென்று நவாஸ் மற்றும் அவரது பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.பேகம் அக்தரின் சடலம் நாளை லாகூருக்கு கொண்டு வரப்பட்டு, அவரது கணவர் மியான் ஷெரீப்பின் கல்லறைக்கு அருகில் ஷெரீப் குடும்பத்தின் உம்ரா ரைவிந்த் இல்லத்தில் அடக்கம் செய்யப்படலாம் என்று தாரார் கூறினார்.

தனது தாயின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்காக நவாஸின் தம்பி மற்றும் பி.எம்.எல்-என் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பை பரோலில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படுவதாக தாரார் கூறினார்.அதே சமயம் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தப்பியோடியவர் என்று அறிவிக்கப்பட்ட பி.எம்.எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், தனது தாயின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்காக நாடு திரும்புவதற்கான சாத்தியம் இல்லை.

“சடலம் லாகூருக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நவாஸ் லண்டனில் உள்ள தனது தாயின் இறுதி பிரார்த்தனைகளில் கலந்துகொள்வார்”.நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, ஒரு சமயம் திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில், அவருடைய தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!