நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தன்னை அக்கட்சி தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தன்னை அக்கட்சி தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சி பிளவுபட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவர் தலைமையிலும் தனி தனி அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை இதை பிரதமர் மோடி கிட்ட கேளுங்க.. திமுகவை குறை சொல்லாதீங்க.! கொந்தளித்த கே.எஸ் அழகிரி
அந்த வகையில் அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு காவியா.? தமிழ்நாடு முழுவதும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு !
இந்த நிலையில், தற்போது அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இதுக்குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாரதப் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, பாஜக மூத்த தலைவர்களின் முன்னிலையில் அன்பழகன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்று தெரிவித்தார்.