AIADMK: அந்த 2 முன்னாள் அமைச்சர்கள்…! போலீசிடம் ‘வாய்’ திறந்த ராஜேந்திர பாலாஜி…?

Published : Jan 05, 2022, 08:52 PM IST
AIADMK: அந்த 2 முன்னாள் அமைச்சர்கள்…! போலீசிடம் ‘வாய்’ திறந்த ராஜேந்திர பாலாஜி…?

சுருக்கம்

சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தமக்கு உதவியதாக போலீசிடம் ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளன.

சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தமக்கு உதவியதாக போலீசிடம் ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளன.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். கிட்டத்தட்ட சேசிங் செய்து அவரை கைது செய்திருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தள்ளுபடி ஆன அடுத்த நிமிடத்தில் இருந்து தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. டிசம்பர் 17ம் தேதி முதல் தலைமறைவான அவரை போலீசார் தேடாத இடம் இல்லை.

கேரளா சென்றுவிட்டார், டெல்லியில் மறைந்திருக்கிறார், 600 பேரின் செல்போன்களின் உரையாடல் விவரங்கள் உதவியுடன் தேடி வருகிறோம் என்று போலீசார் கூறினர். கிட்டத்தட்ட 20 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதுவும், காரில் தப்பி செல்லும் போது சாலையில் சேசிங் செய்து கொத்தாக பிடித்துள்ளனர் போலீசார். ஹசன் பகுதியில் இருந்த செக் போஸ்ட்டை அவர் பயணம் செய்த கார் கடந்து போனதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் க்ராஸ் செக் செய்து துரத்தி பிடித்து கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விரைவில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளார். அதே நேரத்தில் அவர் தப்பிக்க உதவியது யார்? யார்? என்ற விசாரணை படலத்தை காவல்துறை துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 17ம் தேதி முதல் இன்று வரை அவர் எந்தெந்த நாளில் எங்கு தங்கியிருந்தார்? அவர் தங்கியிருந்த இடங்கள் யாருக்கு சொந்தமானவை? உதவியவர்கள் யார்? யார்? என்று விசாரணையை படு வேகமாக துவக்கி இருக்கிறதாம் காவல்துறை.

அதில் லேட்டஸ்ட்டாக ஒரு முக்கிய தகவலை ராஜேந்திர பாலாஜி, காவல்துறை வட்டாரத்தில் கூறி இருப்பதாக விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

முதல்கட்ட விசாரணையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தமக்கு உதவியதாக ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக ஆட்சியில் பவர்புல்லாக அந்த அமைச்சர்கள் இருந்துள்ளனர் என்றும் அவர்கள் செய்த உதவி மற்றும் தைரியத்தினால் தான் இத்தனை நாட்கள் ராஜேந்திர பாலாஜி போலீசின் கண்களில் மண்ணை தூவி தப்பித்துக் கொண்டே இருந்தாராம்.

இப்போது கைது நடவடிக்கை பாய… உதவி செய்தவர்கள் எல்லாரும் வெலவெலத்து போய் உள்ளனராம். ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக முறைப்படி கை கொடுத்த அனைவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர காவல்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு உள்ளதாம்.

அப்படி ஒருவேளை காவல்துறை தீவிர முயற்சி எடுக்கும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது ராஜேந்திர பாலாஜி கைதாகி உள்ள நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருக்கிறது…!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!