அதிமுகவில் ஒற்றை தலைமை..! ஓபிஎஸ் உடன் அவசர ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர்கள்

Published : Jun 15, 2022, 09:09 AM IST
அதிமுகவில் ஒற்றை தலைமை..! ஓபிஎஸ் உடன் அவசர ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர்கள்

சுருக்கம்

அதிமுகவில் ஒற்றை தலைமையை  தேர்ந்தெடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தோடு, அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  

அவரச ஆலோசனையில் ஓபிஎஸ்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து,  சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரைச் சந்திக்க அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் கே பாண்டியன் , முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ஆர். பி   உதயகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படும் ஜே சி டி பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வத்தை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதி முடிவு எடுக்கவில்லை

ஆலோசனை முடித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சி தலைமையின் கருத்து தான் எங்கள் கருத்து என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். அவரை தொடர்ந்து ஆலோசனை முடித்து விட்டு வெளியே வந்த வைத்தியலிங்கம்,  கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து. ஒற்றை தலைமை தொடர்பாக ஏதும் விவாதிக்கவில்லை. நாங்கள் வேறு காரணங்களுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை சந்திக்க வந்தோம் என்று கூறினார். ஒற்றை தலைமை தொடர்பாக ஜெயக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு, ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  சிலர் ஓபிஎஸ்க்கும், சிலர் இபிஎஸ்க்கும்  ஆதரவாக பேசினர். ஆனால் இது தொடர்பாக இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை. கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து என்று வைத்தியலிங்கம் கூறினார்.‌ அத்துடன் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே அதிமுகவின் குறிக்கோள். ஒற்றை தலைமையில் ஓபிஎஸா, இபிஎஸா என்பது தொண்டர்களின் விருப்பம் தான் எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் ஓரங்கட்டப் படுகிறாரா..! அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நடந்தது என்ன..?

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!