முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்கெட்ச்? அவரது உதவியாளர் அதிரடி கைது..!

Published : Mar 04, 2023, 09:14 AM ISTUpdated : Mar 04, 2023, 09:16 AM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்கெட்ச்? அவரது உதவியாளர் அதிரடி கைது..!

சுருக்கம்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக உதவியாளர் ரவியிடம்  11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலைவாங்கி கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- இன்றைய படுதோல்வி நாளைய தொடர் தோல்வியாகிவிடும்! இப்பனாச்சு திருந்துங்க! இபிஎஸ்.ஐ எச்சரிக்கும் மருது அழகுராஜ்.!

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது உறுதியானது. இதனையடுத்து ரவி மற்றும் தரகர் விஜய் ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.  

இதையும் படிங்க;- திமுகவையே அலற விட்டுட்டோம் இல்ல! இடைத்தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி எங்களுக்கதான்!ஜெர்க் ஆகாத ஜெயக்குமார்

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த ரவி என்கிற டைப்பிஸ்ட் ரவி பணியிட மாற்றம் செய்து தருவதாகவும், மருத்துவக்கல்லூரிகளில் சீட்டு வாங்கித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இந்த மோசடிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!